திருப்புல்லாணி அருகே 34 கிலோ கஞ்சா பறிமுதல்

கீழக்கரை: திருப்புல்லாணி அருகே கடற்கரையில் ஒதுங்கிய 34 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே களிமங்குண்டு கடற்கரை பகுதியில் கஞ்சா மூட்டை கரை ஒதுங்கி உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து திருப்புல்லாணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு பிளாஸ்டிக் பையால் சுற்றி 17 பாக்கெட்டில் சுமார் 34 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. முக்கியமாக, கஞ்சா கடல் நீரில் மூழ்கி கருமையான நிறத்தில் இருந்தது. இது குறித்து போலீசார் கூறுகையில்,‘‘ இலங்கைக்கு கஞ்சாவை கடத்தல்காரர்கள் கடத்தி சென்றுள்ளனர். செல்லும் வழியில் கடற்படையினர் ரோந்து வந்துள்ளதாக தெரிகிறது. அச்சம் அடைந்த அவர்கள் கஞ்சா மூடையை கடலில் வீசி விட்டு சென்றுள்ளனர். இருப்பினும், இது குறித்து விசாரித்து வருகிறோம்,’’என்றனர்.  …

Related posts

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்

திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை 1.15 லட்சம் நூதன முறையில் திருட்டு: பெண் பணியாளர் 2 பேர் கைது