திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

திருப்புத்தூர், மே 31: திருப்புத்தூர் திருத்தளிநாதர், யோக பைரவர் கோயிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி ஸ்ரீ யோக பைரவருக்கு பால், சந்தனம், மஞ்சள், தயிர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து யோக பைரவர் சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. பூஜைகளை ரமேஷ் குருக்கள் செய்திருந்தார்.

இதில் திருப்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும் பெண்கள் வயிரவர் சன்னதி முன்பு தேங்காய், வெண் பூசனிக்காய், எலுமிச்சம் பழம், அகல் விளக்குகள் ஆகியவற்றில் நல்லெண்ணெய், நெய் தீபம் ஏற்றி தங்களது நேர்த்திக்கடனையும், வேண்டுதலையும் முன்வைத்து வழிபட்டனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு