திருப்புத்தூரில் சாலை பணியாளர்கள் சங்க மாநாடு

திருப்புத்தூர், ஜூன் 24: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் நேற்று தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை சாலை பணியாளர்கள் சங்க 8 வது வட்டக்கிளை மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, திருப்புத்தூர் உட்கோட்ட தலைவர் ராஜா தலைமை வகித்தார். சிங்கம்புணரி உட்கோட்ட தலைவர் நெவுலி கணேசன் முன்னிலை வகித்தார். சிங்கம்புணரி மதி வரவேற்றார்.

மாவட்ட தலைவர் மாரி துவக்க உரையும், மாவட்ட செயலாளர் முத்தையா சிறப்புரையும் நிகழ்த்தினர். திருப்புத்தூர் உட்கோட்ட செயலாளர் சரவணன் மற்றும் வரவு செலவு அறிக்கையினை சமர்ப்பித்தார். அரசு ஊழியர் சங்க வட்ட கிளை தலைவர் லதா, சத்துணவு ஊழியர் சங்கம் ஒன்றிய செயலாளர் நேரு, சாலை பணியாளர் சங்கம் சிவகங்கை வட்டக்கிளை இணைச்செயலாளர் மருது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட செயலாளர் முத்தையா சிறப்புரையும், மாநில பொருளாளர் தமிழ் நிறைவுரையும் வழங்கினர். இந்த வட்டக்கிளை மாநாட்டில் வருகின்ற செப்டம்பர் மாதம் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தாராபுரம் கோட்டம் உடுமலைப்பேட்டையில் நடைபெற உள்ள 8-வது மாநில மாநாட்டில் கலந்து கொள்வது குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் புதிய நிர்வாகிகளாக உட்கோட்ட தலைவர் ராஜா, செயலாளர் சரவணன், பொருளாளர் வேலு, துணைத்தலைவர் பெஞ்சமின், இணைச்செயலாளர் முகமது மகுது உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் இந்த மாநாட்டில் சாலை பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டி 8க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சி முடிவில் திருப்புத்தூர் உட்கோட்ட துணைத்தலைவர் பெஞ்சமின் நன்றி கூறினார்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்