திருப்பாலைக்குடியில் மீனவர்களுக்கான டீசல் பங்க் கட்டும் பணி கலெக்டர் ஆய்வு

ஆர்.எஸ்.மங்கலம், அக். 4: திருப்பாலைக்குடியில் மீன்வளத்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்டு வரும் டீசல் பங்க்கை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்து பார்வையிட்டார். ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி பகுதி மனவர்களின் படகுகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் பாண்டிகோவில் அருகே மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக டீசல் பங்க் அமைக்கும் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

இப்பணியை நேற்று கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன்பிறகு கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து காந்திநகர் உள்ளிட்ட மீனவர் கிராமத்திற்கு செல்லும் சாலையை சீரமைத்து தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். உடனே அப்பகுதிக்கு சென்று சாலையை பார்வையிட்ட கலெக்டர் சாலையை சீரமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் பிராபவதி, ஆர்.எஸ் மங்கலம் தாசில்தார் வரதராஜன், மீன்வளத் துறை உதவி இயக்குநர் (வடக்கு) கோபிநாத் ,மீன்வளத் துறை ஆய்வாளர் அபுதாஹிர், ஊராட்சி மன்ற தலைவர் முகம்மது உமர் பாரூக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

திருநின்றவூர் ஏரியில் ₹50 லட்சம் மதிப்பில் மதகுகளை சீரமைத்து, கால்வாய் சுத்தம் செய்யும் பணி தீவிரம்: நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி ஆர்எம்கே பள்ளி மாணவனுக்கு தங்கம்

கும்மிடிப்பூண்டி அருகே பயங்கரம்; ஓசியில் பொருள் கொடுக்காத ஆத்திரத்தில் மளிகைக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு