திருப்பத்தூர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2.50 டன் ரேஷன் அரிசி பறிமுதல்-வட்ட வழங்கல் அலுவலர் அதிரடி

திருப்பத்தூர் : திருப்பத்தூர் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசி வீடுகளில் பதுக்கி வைத்து லாரிகள் மூலம் ஆந்திராவுக்கு கடத்தப்படுவதாக வட்ட வழங்கல் அலுவலர் கண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி அருகே உள்ள ஒரு வீட்டை கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது 80 மூட்டை ரேஷன் அரிசி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதில் சுமார் ஒரு டன் அரிசி இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அதனைத் தொடர்ந்து தாமலேரிமுத்துர் பகுதியில் மறைவான இடத்தில் ஒரு வீட்டில் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சோதனை செய்தபோது 90 மூட்டைகளில் 1.50 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2.50 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து திருப்பத்தூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் இந்த அரிசி பதுக்கி வைத்த நபர் யார்? எதற்காக பதுக்கி வைத்துள்ளார்கள் என்று விசாரணை செய்து வருகின்றனர்….

Related posts

பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து – போர்மேன் கைது

சர்ச்சை சொற்பொழிவு: பள்ளிக்கல்வித் துறை சார்பில் விரைவில் வழிகாட்டு நெறிமுறை