திருப்பதி மலைப்பாதையில் பாறைகள் சரிந்தது: போக்குவரத்து பாதிப்பு

திருமலை: ‘மாண்டஸ்’ புயல் காரணமாக ஆந்திராவில் நேற்று முன்தினம் முதல் பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு முதல் தென் ஆந்திராவில் உள்ள நெல்லூர், திருப்பதி, சித்தூர், கடப்பா, அன்னமய்யா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. திருப்பதி திருமலையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் குளிர்காற்றுடன் மழையையும் பொருட்படுத்தாமல் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். திருப்பதி மலைப்பாதையில் நேற்று மதியம் முதல் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த அதிகாரிகள் ஊழியர்களுடன் இணைந்து தரைப்பாலத்தில் விழுந்து கிடந்த பாறைகளை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால், மலைப்பாதையில் வாகனங்கள் ஆங்காங்கே சாலையில் நின்றது. மேலும்  அலிபிரி சோதனையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன….

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து சஸ்பென்ட் ஆன சிஐஎஸ்எப் காவலர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்