திருப்பதி கோயிலில் 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறை காரணமாக ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருமலையில் கடந்த சில நாட்களாக அதிகளவு பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் கடந்த 3நாட்களாக வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் அனைத்தும் நிரம்பி பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் 48 மணி நேரமும், நேற்று 24 மணி நேரமும் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று 74,823 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 31,159 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயிலில் தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் ரூ4.51 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இந்நிலையில் இன்று வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 20 அறைகள் நிரம்பியுள்ளது. இதனால் இலவச தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்….

Related posts

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி கொகைன் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் விமான நிலையத்தில் கைது

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கருணை கொலைக்கு அனுமதி கோரிய மனு நிராகரிப்பு

நண்பர்களுக்கு ஆதாயம் தேடி தருவதுதான் மோடியின் முதன்மை கொள்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு