திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 5 வயது சிறுவனை கடத்திய மர்ம பெண்: சிசிடிவி காட்சிகள் மூலம் போலீஸ் விசாரணை

திருமலை: ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் உள்ள தாமினேடு பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ரமணா. இவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் நெற்றியில் நாமம் இட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து குடும்பம் நடத்தி வருகிறார். இவரது மகன் கோவர்தன்ராயல் என்கிற சிண்டு(5). நேற்று முன்தினம் வெங்கட்ரமணா வழக்கம்போல் ஏழுமலையான் கோயில் 4 மாட வீதிகளில் பக்தர்களுக்கு நாமம் இடும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, அவரது 5 வயது மகன் அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்தான்.சிறிது நேரத்திற்கு பிறகு பார்த்தபோது மகன் கோவர்தன்ராயல் காணாததை கண்டு வெங்கட்ரமணா அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து கதறியபடியே கோயில் வளாகம் முழுவதும் தேடினார். இரவு வரை தேடியும் மகனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், கடும் வேதனையடைந்த வெங்கட்ரமணா திருமலை 2வது நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து சிறுவன் குறித்து விசாரணை நடத்தினர். மேலும், தேவஸ்தான கட்டுப்பாட்டு அறையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.அதில், மாலை 5.45 மணியளவில் கோயில் சுற்றுப்பகுதியில் இருந்த சிறுவன் கோவர்தன்ராயலிடம் மொட்டை அடித்திருந்த மர்மபெண் ஒருவர் பேசுகிறார். பின்னர், சிறுவனின் கையை பிடித்து அழைத்து கொண்டு பாலாஜி பஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து, அங்கிருந்து ஒரு பஸ்சில் ஏறி திருப்பதி பஸ் நிலையத்திற்கு செல்கிறார். இந்த காட்சிகளை வைத்து மர்ம பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்….

Related posts

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது