திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை காண ஒரே இரவில் 50,000 இலவச தரிசன டிக்கெட் விநியோகம்.. அலைமோதிய கூட்டம்..!!

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி காண இலவச தரிசன டிக்கெட்டுகளை பெறுவதற்கு பொதுமக்கள் அதிகளவில் கூடியதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசியை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 13ம் தேதி முதல் 10 நாட்களுக்கு பக்தர்கள் சொர்க வாசல் வழியாக அனுமதிக்கப்படவுள்ளனர். இதில் தினந்தோறும் 5,000 உள்ளூர் மக்கள் இலவசமாக செல்வதற்கு டிக்கெட் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனை வாங்குவதற்கு ஒரே நேரத்தில் ஏராளமானோர் கூடியதால் கோவிலில் நோய் தொற்று பரவும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.நாள் ஒன்றுக்கு 5,000 பேர் என 10 நாட்களுக்கு 50,000 டிக்கெட்டுகள் ஒரே இரவில் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே திருப்பதியில் நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இலவச தரிசன டிக்கெட் வாங்க பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடியது நோய் பரவலை அதிகரிக்கும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 13ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா, 14ம் தேதி வைகுண்ட துவாதசி விழா நடக்கிறது. இந்த விழா வருகிற 22ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பூஜைகள், அலங்காரம், ஆராதனை நடைபெற்று வருகிறது….

Related posts

ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் மறுதேர்வுக்களுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஜார்க்கண்டில் பள்ளி முதல்வர், துணை முதல்வர் கைது: சிபிஐ விசாரணை

மோடியை நேருவுடன் ஒப்பிட முடியாது: பாஜ எம்.பி. பேச்சால் சர்ச்சை