திருப்பதி ஏழுமலையானுக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பிப்பு: உற்சவம் இன்று நிறைவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் நடைபெறக்கூடிய பூஜைகளில் அர்ச்சகர்கள், பக்தர்கள் மற்றும் ஊழியர்களால் ஏற்படும் தோஷங்களுக்கு பரிகாரமாக  ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்களுக்கு பவித்ர உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் பவித்திர மாலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டதுடன் பவித்ர உற்சவம் தொடங்கியது. இரண்டாவது நாளான நேற்று யாகசாலையில் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  பின்னர்  யாகசாலையில் வைக்கப்பட்ட பவித்ர மாலைகள் மூலவர், உற்சவர்கள், யோகநரசிம்மர், வகுலமாதா தாயார், பேடி ஆஞ்சநேயர்,  வராக சுவாமி, ஆனந்த நிலையம், கொடிமரம், பலிபீடம் உள்ளிட்ட பல்வேறு இதர சன்னதியில்  சமர்ப்பிக்கப்பட்டது. இதில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, செயல் அலுவலர் ஜவகர், கூடுதல் செயல் அலுவலர் தர்மா   உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்நிலையில், இன்று யாக பூர்ணாஹூதியுடன் பவித்ர உற்சவம் நிறைவடைகிறது. கடந்த 15ம் நூற்றாண்டு வரை ஏழுமலையான் கோயிலில் பவித்ர உற்சவம் நடத்தப்பட்டதாக கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளது. அதன்பிறகு நிறுத்தப்பட்ட இந்த உற்சவத்தை 1962ம் ஆண்டு முதல் திருமலை- திருப்பதி தேவஸ்தானம் தொடர்ந்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே,  செப்டம்பர் மாதத்திற்கான ரூ.300டிக்கெட்கள் இன்று வெளியிடப்பட இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு் உள்ளது….

Related posts

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி கொகைன் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் விமான நிலையத்தில் கைது

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கருணை கொலைக்கு அனுமதி கோரிய மனு நிராகரிப்பு

நண்பர்களுக்கு ஆதாயம் தேடி தருவதுதான் மோடியின் முதன்மை கொள்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு