திருப்பதியில் நடிகர் ரஜினிகாந்த் சுப்ரபாத சேவையில் அதிகாலை வழிபாடு: அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதிக்கு ரஜினி வாழ்த்து..!!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் அவரது மகள் ஐஸ்வர்யா சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்தனர். திருமலையில் உள்ள டீ.எஸ்.ஆர் விருந்தினர் மாளிகையில் நேற்று இரவு தங்கிய நடிகர் ரஜினிகாந்த் அதிகாலையில் மகள் ஐஸ்வர்யாவுடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவர்களை தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி வரவேற்றார். பின்னர் வேத பண்டிதர்கள் அவர்களுக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், 6 வருடங்கள் கழித்து திருப்பதி ஏழுமலையானை தரிசித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்று உள்ள நிலையில் அவருக்கு முன்னரே வாழ்த்து தெரிவித்துவிட்டேன் எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.  …

Related posts

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்