திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் தற்காலிகமாக நிறுத்தம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதி பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை, ரயில் நிலையம் பின்புறம் உள்ள கோவிந்தராஜர் சுவாமி சத்திரம், அலிபிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வரும் 12ம்தேதி சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்ெகட்டுகள் இன்று மதியம் வரை மட்டும் வழங்கப்பட்டது. அதன்பிறகு இலவச தரிசன டிக்கெட் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.12ம்தேதி மதியத்திற்கு பிறகு இலவச தரிசன டிக்ெகட்டுகள் வழங்கப்படும். 12ம்தேதி தரிசன டிக்ெகட் பெற்ற பக்தர்கள் 13ம் தேதி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். எனவே பக்தர்கள் இதை கருத்தில் கொள்ளுமாறு தேஸ்தான அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்….

Related posts

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி கொகைன் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் விமான நிலையத்தில் கைது

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கருணை கொலைக்கு அனுமதி கோரிய மனு நிராகரிப்பு

நண்பர்களுக்கு ஆதாயம் தேடி தருவதுதான் மோடியின் முதன்மை கொள்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு