திருநெல்வேலி மாவட்டம் நம்பி ஆற்றங்கரையில் அகழாய்வு பணிகள் தொடங்கி வைத்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு..!!

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நம்பி ஆற்றுப்படுகையில் தமிழக அரசு சார்பில் அகழாய்வு பணிகள் தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மற்றும் சங்ககால கொற்கை துறைமுகத்தினை அடையாளம் காண முன்களப்பு ஆய்வுகள் நடத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன் ஒருபகுதியாக நெல்லை மாவட்டம் நம்பி ஆற்றுப்படுகையில் துலுக்கர்பட்டியில் அகழ்வாராய்ச்சி பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நம்பி ஆற்றங்கரையில்  இரும்புகால பண்பாட்டின் வேர்களை தேடுவதே இந்த அகழ்வாய்வின் நோக்கம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். துலுக்கர்பட்டி தொல்லியல்மேடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம் என்பதால் இங்குள்ள தொன்மை பொருட்களை வெளிக்கொண்டு உரிய வகையில் கனிம பகுப்பாய்ப்புக்கு உட்படுத்துவதன் மூலமாக பல்வேறு விஷயங்களை வெளியுலகத்திற்கு எடுத்து செல்ல முடியும் என்று அமைச்சர் கூறியுள்ளார். துலுக்கர்பட்டியை தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையிலும் பொருனை ஆற்றின் ஈடாக நம்பி ஆற்று படுகையிலும் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. …

Related posts

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியீடு

12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு: நாளை உத்தரவு