திருநள்ளாறு கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு

 

காரைக்கால், ஆக.18: திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் நடைபெற்ற ஆவணி மாத வளர்பிறை மகா சனி பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற  தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் சனிபகவான் ஆலயத்தில் ஆவணி மாதம் வளர்பிறை மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. முன்னதாக மஞ்சள்,பால்,தயிர்,விபூதி, சந்தனம் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது.தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. ஆவணி மாத வளர்பிறை சனி பிரதோஷ பூஜையில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ல கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவான் பூஜையில் பங்கேற்று வழிபட்டனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து