திருநள்ளாறில் ஜூன் 9ல் பிரமோற்சவ தேரோட்டம்: தேர்களை சீரமைக்கும் பணி மும்முரம்

காரைக்கால்: திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேர்களை சீர்ப்படுத்தும் வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா மே 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பிரமோற்சவம் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜூன் 9ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் ஐந்து ரத தேர்களான நீலோத்பாலாம்பாள், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், செண்பக தியாராஜ சுவாமி ஆகிய சுவாமிகள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெறும். இதையொட்டி 5 தேர்களையும் சீர்படுத்தி அழகுப்படுத்தும் வேலைகளில் கோவில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்….

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை