திருநங்கைகள் தாக்கியதில் 3 நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் காயம்

 

லால்குடி, ஆக.31: லால்குடி அருகே பனமங்கலம், நகர், இருந்து பூவாளூர், கல்லகம் பகுதி வரை தேசிய நெடுஞ்சாலை அணுகு பகுதியில் திருநங்கைகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோரை வழிமறித்து அருவெறுக்கத்தக்க வகையில் நடந்து கொள்வதும் நகை பறிப்பில் ஈடுபடுவதும் போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதனை கண்காணிக்கும் வகையில் காவல்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் லால்குடி அருகே கீழ்மாரிமங்கலம் என்ற இடத்தில் கடந்த 28ம் தேதி இரவு தேசிய நெடுஞ்சாலை ஆணைய பாதுகாப்பு வாகனத்தில் வந்திருந்த பணியாளர்கள் மூவரை திருநங்கைகள் வழிமறித்து கடுமையாக தாக்கினர். பத்துக்கும் மேற்பட்ட திருநங்ககைள் சேர்ந்துகொண்டு தாக்கியதுடன் ஜீப்பையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். புகாரின்பேரில் லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருநங்கைகள் தாக்கியதில் காயமடைந்த நெடுஞ்சாலைதுறை பணியாளர்கள் பாரதி , ராபின்சன், ராஜசேகர் ஆகிய மூவரையும் மீட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் வாகனங்களை சேதப்படுத்திய திருநங்கைகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்