திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவக்கம்

 

திருத்துறைப்பூண்டி, ஜூலை 18: திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் 2024-25ம் ஆண்டிற்கான புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவங்கப்பட்டது. கச்சனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் அறிவழகன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணைந்து 15 வயதிற்கு மேற்பட்ட கல்லாதவருக்கு புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தன்னார்வலர்கள் மூலமாக பயிற்சிகள் அளிக்க உள்ளனர்.

இதில் கச்சனம் பள்ளிக்கு உட்பட்ட காகம்,ஆப்பரக்குடி, கச்சனம் ஆகிய பகுதிகளில் உள்ள எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு பெறாத 15 வயதிற்கும் மேற்பட்ட கற்போர் பயன்பெறுகின்றனர். இதன் துவக்க விழாவில் வட்டார கல்வி அலுவலர் பேருந்து பயணத்தின் போது தாங்கள் செல்லவிருக்கும் ஊரின் பெயரை கண்டறிவதற்கு எழுத்தறிவு மிகவும் அவசியம் என எடுத்துக் கூறினார். இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அனுப்ரியா முன்னிலை வகித்தார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி ஆசிரியர்கள் ஜெயந்தி, லட்சுமி பரமேஸ்வரி, தன்னார்வலர்கள் ரம்யா, சூரியகலா ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்வில் கற்போருக்கான புத்தகங்களும் வழங்கப்பட்டது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி