திருத்துறைப்பூண்டியில் காவல்துறை பெட்டிஷன் மேளா

 

திருத்துறைப்பூண்டி, ஜூலை 22: திருத்துறைப்பூண்டி காவல் உட்க்கோட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் புகார் மனுக்கள் பெறும் பெட்டிஷன் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். திருத்துறைப்பூண்டி ஆலிவலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய நகராட்சி 24 வார்டுகள் மற்றும் 32 ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். இந்த மனுக்களை ஆய்வு செய்த போலீசார் பெறப்பட்ட 30 மனுக்களில் 25 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டதாக டிஎஸ்பி சோமசுந்தரம் தெரிவித்தார். இதில் திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, கோட்டூர் இன்ஸ்பெக்டர் சிவகுமார், திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிந்து நதி, திருத்துறைப்பூண்டி சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார் புஷ்பநாதன், சப் இன்ஸ்பெக்டர் (பயிற்சி )திருமலை குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி