திருத்துறைப்பூண்டியில் பொது மருத்துவ முகாம்

 

திருத்துறைப்பூண்டி,நவ.26: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நகராட்சி நிர்வாகம், மக்கள் நல்வாழ்வுத்துறை இணைந்து பொது மருத்துவ முகாம் தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக இயக்குனர் அறிவுரையின் படியும் நகராட்சி ஆணையர் மல்லிகா வழிகாட்டியின் நடைபெற்றது. வட்டாச்சியர் கார்ல்மார்க்ஸ் முன்னிலையில் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் துவக்கி வைத்தார்.

முகாமில் பொது மருத்துவம், சித்த மருத்துவம், நேச்சுரோபதி, காசநோய், பல்மருத்துவம் சம்பந்தமாக மருத்துவ அலுவலர்கள் டாக்டர் விநாயகவேலன், டாக்டர் சைமா தலைமையில் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்து மருந்து மாத்திரை வழங்கி ஆலோசனை வழங்கினர்.

முகாமில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி சுகாதார மேற்பார்வையாளர்கள் வீரையன், சந்திரசேகர், களப்பணி உதவியாளர் ஸ்டீபன் பால்ராஜ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துகுமாரசாமி, சமுதாய சுகாதார செவிலியர்கள், மருத்துவ சாரா மேற்பார்வையாளர், பகுதி சுகாதார செவிலியர்கள், செவிலியர்கள் தூய்மை திட்டம், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை