திருத்துறைப்பூண்டியில் ரூ.20.40 கோடியில் புறவழிச்சாலை பணி

திருத்துறைப்பூண்டி, ஏப். 21: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ரூ.20.40 கோடியில் நடைபெற்று வரும் புறவழிச்சாலை பணி மற்றும் ரவுண்டானா அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது 80 சதவீம் பணி முடிந்து உள்ளது. அடுத்த மாதம் முதல்வாரத்தில் புறவழிச்சாலை பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்ப்பார்க்ப்படுகிறது. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் சாரு ஆய்வு செய்து பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார்.

மேலும், ரவுண்டானா அமைக்கும் இடத்தில் மின்கம்பங்களை மாற்ற மின்வாரியத்துக்கும், குடிநீர் பைப்களை மாற்ற குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பின்னர் புறவழிச்சாலையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். ஆய்வின்போது, தாசில்தார் காரல்மார்க்ஸ், திருவாரூர் கோட்ட பொறியாளர் இளம்வழுதி, உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்து, இளநிலை பொறியாளர் ரவி மற்றும் சாலை ஆய்வாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை