திருத்தளிநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

 

திருப்புத்தூர், செப்.29: திருப்புத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர் யோக பைரவர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. பிரதோஷத்தையொட்டி நேற்று முன்தினம் மாலை திருத்தளிநாதருக்கும், நந்தீஸ்வரருக்கும் பால், சந்தனம், மஞ்சள், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடந்தன.

திருத்தளிநாதரும் சிவகாமி அம்மனும் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ மூர்த்திகளாக எழுந்தருளி கோயிலின் உட்பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் பிரதோஷ மூர்த்திகளுக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமான பெண்கள் நெய் தீபம் ஏற்றி தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வழிபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பிரதோஷ குழுவினர் செய்திருந்தனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு