திருத்தளிநாதர் கோயிலில் அஷ்டமி சிறப்பு வழிபாடு

திருப்புத்தூர், செப். 23: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று ஸ்ரீ யோக பைரவருக¢கு பால், சந்தனம், மஞ்சள், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து யோக பைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திருப்புத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பெண்கள் தேங்காய், எலுமிச்சம் பழம், வெண்மை பூசனிக்காய், நெய் தீபம் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை