திருத்தளிநாதர் கோயிலில் பிரதோஷ விழா சிறப்பு வழிபாடு

திருப்புத்தூர், ஜூன் 5: திருப்புத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர், யோக பைரவர் கோயிலில் நேற்று பிரதோஷ விழா நடைபெற்றது. பிரதோஷ விழாவை முன்னிட்டு நேற்று மாலை 5 மணி அளவில் திருத்தளிநாதருக்கும், நந்திப் பெருமானுக்கும், திருமஞ்சனம், பால், சந்தனம், மஞ்சள், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நந்திப்பெருமானும், திருத்தளிநாதரும் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர்.

தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் திருத்தளிநாதரும், சிவகாமி அம்மனும் பிரதோஷ மூர்த்திகளாக வெள்ளி ரிஷப் வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிறகாரத்தை வலம் வந்தனர். பிரதோஷ மூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். ஏற்பாடுகளை பிரதோஷ குழுவினர் செய்திருந்தனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி