திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

திருத்தணி:  திருத்தணி முருகன் கோயிலில் நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பல மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பஸ், ரயில் மற்றும் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் குடும்பத்துடன் வந்து முருகனை வழிபட்டு செல்கின்றனர். இந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் குடும்பத்துடன் குவிந்தனர். அவர்கள் மலைக்கோயில் வளாகத்தில் உள்ள இலவச தரிசன டிக்கெட் மற்றும் கட்டண டிக்கெட் கவுண்டர்களில் பலமணி நேரம் காத்திருந்து முருகனை வழிபட்டனர். சிலர் முடி காணிக்கை செலுத்தினர். இருப்பினும் டிக்கெட் கவுண்டர் பகுதியில் கொரோனா பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வரிசையில் நின்ற பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்