திருத்தணி முருகன் கோயிலில் மாசி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: 14ம் தேதி தேரோட்டம்

திருத்தணி: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி பிரமோற்சவ விழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவான தேரோட்டம் 14ம் தேதி நடக்கிறது.திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி பெருவிழா வெகு விமரிசையாக மலை கோயிலில் நடைபெறும். இந்தாண்டு திருவிழா சிறப்பு பூஜை செய்து நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.  காலை 9.30 மணிக்கு வெள்ளி சூரிய பிரபை வாகனத்திலும் 10ம் தேதி காலை 9.30 மணிக்கு சிம்ம வாகனத்திலும், 11ம் தேதி காலை 9.30 மணிக்கு பல்லக்கு சேவை உற்சவமும் நடக்கிறது. தொடர்ந்து, 12ம் தேதி காலை 9.30 மணிக்கு அன்ன வாகனம், 13ம் தேதி மாலை 4.30 மணிக்கு புலி வாகனத்தில் உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். முக்கிய விழாவான தேர் திருவிழா 14ம் தேதி நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். 15ம் தேதி மாலை 5 மணிக்கு பாரிவேட்டை, இரவு மேல்திருத்தணி வள்ளி மண்டபத்தில் வள்ளியம்மையை சிறையெடுத்தல், அதைத் தொடர்ந்து குதிரை வாகனம், வள்ளியம்மை திருக்கல்யாணம் நடக்கிறது. இந்த வைபத்திலும் பக்தர்கள் கலந்துகொள்வார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்….

Related posts

குமரியில் கனமழை காரணமாக உப்பு விலை உயர்வு

தமிழ்நாட்டில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்