திருத்தணி நகராட்சியில் தனித்து களம் காணும் தேமுதிக

திருத்தணி: திருத்தணி நகராட்சி வார்டுகளில் தேமுதிக தனித்து போட்டியிடுகிறது. திருத்தணி நகராட்சியில் 21 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுகிறது. இதில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் டி.கிருஷ்ணமூர்த்தி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘திருத்தணி சட்டமன்ற தொகுதியில் திருத்தணி நகராட்சி, பொதட்டூர்பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு பேரூராட்சிகளில் தேமுதிக தனித்து போட்டியிடுகிறது. வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஒரிரு நாளில் வெளியிடப்படும். திருத்தணி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 15 வார்டுகளில் மட்டும் தேமுதிக வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். அந்த அனைத்து வேட்பாளர்களும் நாளை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள். அதற்கான ஏற்பாடுகளில் எங்கள் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபடுவோம்’ என்றார்….

Related posts

சொல்லிட்டாங்க…

புதிய குற்றவியல் திருத்த சட்டத்தில் இந்தி திணிப்பு; அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 4வது இடம்தான் என்பதால் அதிமுக போட்டியிடவில்லை: அழிவுக்கு ஜெயக்குமார்தான் காரணம்