திருத்தணி தொகுதியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு திமுக – அதிமுக நேரடி மோதல்

பள்ளிப்பட்டு: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் திருத்தணி தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்பியுமான திருத்தணி கோ.அரி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் அக்கட்சியின் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினரும், 15 ஆண்டுகள் தொடர்ந்து திருத்தணி நகரமன்ற தலைவராக பதவி வகித்த திருத்தணி எஸ்.சந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் 25 ஆண்டுகளுக்கு பிறகு திமுக, அதிமுக நேரடியாக மோதுவதால் இரு கட்சியினரும் வெற்றி பெற போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கிறது. இந்நிலையில், 25 ஆண்டுகளுக்கு பிறகு திமுக – அதிமுக நேரடியாக மோதுவதால் தொகுதியை தக்கவைக்க அதிமுகவும்,  வெற்றி பெற்று சாதனை படைக்க திமுகவும்  கடும் முயற்சி செய்து வருகிறது. இதற்காக அனைத்து பகுதிகளிலும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளை ஒருங்கிணைந்து தேர்தல் வியூகங்கள் அமைத்து பிரசாரத்தை தீவிரப்படுத்தி வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் திருத்தணியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது….

Related posts

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சொல்லிட்டாங்க…