திருத்தணி தொகுதியில் அடிப்படை வசதிகள்: கலெக்டரிடம் எம்எல்ஏ சந்திரன் மனு

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் ஆல்பிஜான் வர்கீசிடம், திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது. திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு ஆகிய ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில் சாலை, குடிநீர், சுடுகாடு ஆகிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பழுதடைந்த சாலைகள், மேம்பாலங்களை சீரமைத்து தர வேண்டும்.நெடியம் கிராமத்தில் மேம்பாலம், சொரக்காய்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர், அம்மையார் குப்பம் ஏரிக்கரை சாலை விரிவாக்கம், நொச்சிலி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் வளர்ச்சி பணிகள், மாற்று திறனாளிகளுக்கு 3 சக்கர மிதிவண்டிகளை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கூறப்பட்டள்ளது. அந்த மனுவை பெற்று கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.அப்போது, திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆரத்தி ரவி, ரவீந்திரா, காங்கிரஸ் நிர்வாகி முருகன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் திலகவதி ரமேஷ், அம்மையார்குப்பம் ஊராட்சி தலைவர் ஆனந்தி செங்குட்டுவன், ஒன்றிய கவுன்சிலர்கள் உமாபதி, சிவகுமார், பிரமிளா வெங்கடேஷ், தனலட்சுமி காளத்தீஸ்வரன், செல்வி சந்தோஷ், அம்மு சேகர் உள்பட பலர் இருந்தனர்….

Related posts

சென்னையில் பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைப்பு..!!

சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

அத்வானி மதுரை வருகையின் போது வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக கைதான ஷாகிர் சிறையில் தற்கொலை முயற்சி