திருத்தணியில் சாரல் மழையால் ஆறுகளில் நீர்வரத்து: பொதுமக்கள் மகிழ்ச்சி

திருத்தணி, ஜூலை 16: திருத்தணி பகுதியில் பெய்த தொடர் சாரல் மழையால் ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுற்று வட்டாரங்களில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகின்றது. கோடை வெயிலுக்கு வறண்ட நீர் நிலைகளில், ஒரு வாரமாக பெய்து வரும் மழைக்கு நீர் நிலைகளில் மழைநீர் வரத்து தொடங்கி உள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் இரவு வரை தொடர்ந்து லேசான சாரல் மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு சிறு வியாபாரிகள், பேருந்து பயணிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். அதேநேரத்தில், கோடை வெயில் தாக்கத்திற்கு திருத்தணி பகுதியில் வறண்டு காணப்பட்ட நந்தி ஆற்றில் மழைநீர் வரத்து தொடங்கியுள்ளது. தெக்களூர் அருகே நந்தி ஆற்றில் தடுப்பணையில் மழைநீர் நிரம்பி தேங்கி நிற்கின்றது. வரும் நாட்களில் மழை தொடர்ந்தால், நந்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், திருத்தணி பகுதி விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

தூத்துக்குடியில் புரோட்டா மாஸ்டர் மாயம்\

வியாபாரியை மிரட்டியவருக்கு வலை

தூத்துக்குடி விமான நிலையத்தில் ஒன்றிய அமைச்சருக்கு பாஜவினர் வரவேற்பு