திருத்தங்கல்லில் 3 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டி பணிகள் விரைவில் துவங்கப்பட வேண்டும்: குடியிருப்புவாசிகள் வலியுறுத்தல்

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் மண்டலத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை உடனடியாக கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனி மற்றும் சுற்றுப்புற பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து திருத்தங்கல் 2வது வார்டு ஸ்டாண்டர்டு காலனியில் தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டது. 3 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ரூ.40லட்சம் செலவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2013ம் ஆண்டே டெண்டர் விடப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களினால் பணிகள் தொடங்கப்படாத நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் 40 சதவிகிதம் கூட முடிவடையாத நிலையில் மீண்டும் கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக பணிகள் தொடங்கும் என்று காத்திருந்த குடியிருப்புவாசிகளுக்கு தற்போதுவரை ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.  மேற்கண்ட பகுதி மக்களும் குடிநீர் பற்றாக்குறை பிரச்னையால் தவித்து வருகின்றனர். மேற்கண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகளை விரைந்து முடிக்க கோரி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகி்ன்றது.  பொதுமக்கள் நலன் கருதி, கிடப்பில் போடப்பட்டுள்ள குடிநீர் மேல்நிலை தொட்டி அமைக்கும் பணியை துவங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்