திருச்செந்தூர் சுடலை மாடசுவாமி கோயிலில் கொடை விழா கால்நாட்டு வைபவம்

திருச்செந்தூர், ஜூலை 19: திருச்செந்தூர் மேலத் தெரு யாதவ சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயில், சுடலை மாடசுவாமி கோயில் கொடை விழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டுக்கான கொடை விழா, கடந்த 16ம் தேதி துவங்கி இன்று (19ம் தேதி) வரை நடக்கிறது. இதேபோல் சுடலைமாடசாமி கோயில் கொடை விழா, வரும் 24ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் நடக்கிறது. இதை முன்னிட்டு கடந்த 16ம் தேதி இரவு அம்மனுக்கு மாகாப்பு தீபாராதனை நடந்தது. மறுநாள் இரவு 8 மணிக்கு இன்னிசை கச்சேரி, 10 மணிக்கு சுவாமிக்கு கும்பம் ஏற்றுதல், 10.15 மணிக்கு அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். நேற்று காலை 6.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, திருக்கும்பம் ஏற்றி அம்மன் நகர்வலம் வருதல் ஆகியன நடந்தது.

காலை 11.50 மணிக்கு சுடலைமாட சுவாமி கோயிலில் கொடை விழாவுக்கான கால்நாட்டு வைபவம் நடந்தது. மாலை 5 மணிக்கு பால்குட ஊர்வலம், இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 9 மணிக்கு சிறப்பு பட்டிமன்றம், 10 மணிக்கு முளைப்பாரி எடுத்தல், 10.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் மேலத் தெரு யாதவ மகாசபை தலைவர் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், கொடை விழா கமிட்டியாளர்கள் மற்றும் ராம் சுப்பிரமணியன், ஓட்டல் அர்ச்சனா சக்தி, சுந்தரம் காட்டேஜ் ஆறுமுகம், சாந்தி பேக்கரி ராதாகிருஷ்ணன், செந்தூர் கந்தவிலாஸ் கண்ணன், வீரபாகு மகால் வீரபாகு, பொறியாளர் நாராயணன், ஓட்டல் தர்மாஸ் கிராண்ட் ராஜகண்ணன், நம்பிராஜன், யாதவ வியாபாரிகள் சங்கத் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் கவுரவ ஆலோசகர், சுபா கோபால், செந்தில் ஆறுமுகம், எஸ்.கே.மோட்டார்ஸ் செந்தில்ஆறுமுகம், விஜய் கணேசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து இன்று (19ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு படைப்பு தீபாராதனை நடந்தது. காலை 7 மணிக்கு படைப்பு அன்ன பிரசாதம், மதியம் 1 மணிக்கு மஞ்சள் நீராட்டு தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மாரியம்மன் கோயிலில் மஞ்சள் நீராட்டு விழா, 5.30 மணிக்கு முளைப்பாரி கடலில் பிரி செலுத்துதல் ஆகியன நடைபெறும். இதேபோல் சுடலைமாடசாமி கோயிலில் வரும் 24ம் தேதி மாலை 5 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி கோயில் சண்முக விலாசத்தில் இருந்து தீர்த்தவாரி எடுத்து மேளதாளத்துடன் வீதி வழியாக கோயில் வந்து சேருதல், 25ம் தேதி மதியம் அன்னதானம், 26ம் தேதி அதிகாலை படைப்பு தீபாராதனை, 7 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

Related posts

தீவிர காய்ச்சலால் அவதி புதுவை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் திடீர் அனுமதி

கள்ளக்குறிச்சி மதி வழக்கு விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு நீதிபதி உத்தரவு

தூண்டில் வளைவு அமைக்கக்கோரி காலாப்பட்டு இசிஆரில் மீனவர்கள் திடீர் மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு