திருச்செந்தூரில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் எண்ணற்ற திட்டங்களை தந்தவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருச்செந்தூர், மே. 10: எண்ணற்ற திட்டங்களை தந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று திருச்செந்தூரில் நடந்த திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார். திமுக அரசின் 2 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரே உள்ள திடலில் நடைபெற்றது. நகர செயலாளர் வாள் சுடலை தலைமை வகித்தார். மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, மருத்துவ அணி மாநில துணை அமைப்பாளர் டாக்டர் வெற்றிவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், அரசு வழக்கறிஞர் சாத்ராக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் வரவேற்றார்.

கூட்டத்தில் மீன் வளம்- மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு திராவிட மாடல் அரசின் 2 ஆண்டுகள் சாதனைகள் குறித்து பேசியதாவது: தகுதியான முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை திட்டம், பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கு பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ.1600 கோடி, இதேபோல் கல்லூரிகள் கட்டுமான பணிக்கு காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டு திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், தகுதியான பெண்களுக்கு அண்ணா பிறந்த நாளில் இருந்து மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை திட்டம் என இப்படி பல எண்ணற்ற திட்டங்களை தந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட பிரதிநிதி செந்தில் ஆறுமுகம், திருச்செந்தூர் நகராட்சி கவுன்சிலர்கள் ஆனந்தராமசந்திரன், சுதாகர், செந்தில்குமார், மாவட்ட மகளிரணி வேல்லம்மாள், வக்கீல் ஜெபராஜ், ரேவதி கோமதிநாயகம், முத்துஜெயந்தி, லீலா, ராமர், சூரியகலா, மாவட்ட துணை அமைப்பாளர்கள் வீரமணி, தங்கபாண்டியன், மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர பொருளாளர் சுப்பையா நன்றி கூறினார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை