திருச்செந்தூரில் கடும் பனிப்பொழிவு: பொதுமக்கள் அவதி

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் நேற்று கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. காலை 7 மணி  வரை பனிமூட்டம் நீடித்ததால் பொது மக்கள் அவதிக்கு உள்ளாகினர். தூத்துக்குடி  மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. பகல் நேரத்தில் வெயில் கொளுத்தும் நிலையில் திருச்செந்தூரில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை  வரை பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக நேற்று அதிகாலை 5 மணியில் இருந்து 7  மணி வரை நகர் முழுவதும் பனி வெள்ளை புகைமண்டலமாக தரையில் இறங்கியது. இதனால்  சாலைகளில் எதிரே வருபவர்கள் கண்களுக்கு புலப்படாத நிலை ஏற்பட்டது. வாகனஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதேபோல் திருச்செந்தூர் பகுதி கடற்கரை மற்றும் வயல் பகுதிகளிலும் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது….

Related posts

துறையூர் அருகே மினி பேருந்து சாலையோர கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம்

சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை செப்.30 வரை நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு

தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார்: சட்டப்பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்