திருச்செங்கோட்டில் ₹7 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு : திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் 150 மூட்டை கொப்பரை ₹7 லட்சத்திற்கு விற்பனையானது.திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில், கொப்பரை ஏலம் நடைபெற்றது. திருச்செங்கோடு மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 150 மூட்டை கொப்பரையை விற்பனைக்காக கொண்டு வந்து குவித்தனர். இதில், முதல் ரகம் ₹91.75 முதல் ₹101.90 வரையிலும், 2ம் ரகம் ₹65.75 முதல் ₹86.10 வரையிலும் விற்பனையானது. ஆக மொத்தம் 150 மூட்டை கொப்பரை ₹7 லட்சத்திற்கு ஏலம்போனது. ரகசிய டெண்டர் மூலம் விற்பனை செய்யப்படுவதால்,  அதிக விலை கிடைப்பதாக சங்க தலைவர் திருமூர்த்தி, மேலாண் இயக்குனர் விஜயசக்தி ஆகியோர் தெரிவித்தனர்….

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்