திருச்செங்கோடு-பரமத்தி 4 வழிச்சாலை பணிகளை எம்எல்ஏ நேரில் ஆய்வு

திருச்செங்கோடு, ஆக.30: நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு உட்கோட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், திருச்செங்கோடு – பரமத்தி சாலையை (திருச்செங்கோடு டிசிஎம்எஸ் முதல் சித்தளந்தூர் வரை) நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணி துவங்கப்பட உள்ளது. இதனை திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வாகன ஓட்டிகள், பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப திட்டமிடுமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இந்த ஆய்வின் போது, உதவி கோட்ட பொறியாளர் மற்றும் பள்ளிபாளையம் உதவி பொறியாளர் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்