திருச்சுழி பகுதியில் மக்காச்சோள பயிர்களை வீணாக்கும் காட்டுப்பன்றிகள்: விவசாயிகள் கவலை

திருச்சுழி: திருச்சுழி பகுதியில் காட்டுப்பன்றிகள் தொல்லையால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருச்சுழி பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் வசிப்பவர்கள் முழமையாக விவசாயத்தை நம்பியே உள்ளனர். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் மழை பொய்த்ததால் விவசாய நிலங்கள் பராமரிக்க முடியாமல் விடப்பட்டன. இதனால் அவற்றில் கருவேல முட்கள் அடர்ந்து காணப்படுகின்றன. தற்போது மூன்று வருட காலமாக ஓரளவு மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களை சீர் செய்து விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இப்பகுதியில் பல ஆயிரக்கான ஏக்கரில் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் மான், மயில், முயல், காட்டுபன்றி என வன விலங்குகள் அதிகளவில் காணப்படுகின்றன. தற்போது திருச்சுழி பகுதியில் சுமார் பத்தாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களை அழித்து சோலார் மின்நிலையம் அமைத்துள்ளனர். இதனால் இப்பகுதியில் இருந்த வன விலங்குகள் இடம்மாறி நார்த்தம்பட்டி, முத்துராமலிங்கபுரம், மறவர்பெருங்குடி, வெள்ளையாபுரம் உள்ளிட்ட பகுதியில் தஞ்சம் புகுந்துள்ளன. இப்பகுதிகளில் விவசாயிகள் வளர்த்துள்ள மக்காசோளம், கடலை செடிகளை காட்டுப்பன்றிகள் நாசம் செய்வதால் விவசாயிகள் வேததைன அடைந்துள்ளனர். இப்பகுதியில் மக்காசோளம் விவசாயம் செய்தால் அதிக மகசூல் கிடைக்குமென விவசாயிகள் பெரும்பாலனோர் மக்காச்சோளம் சாகுபடி செய்கின்றனர். தற்போது அதிகளவு மழை பெய்யும் என நம்பி பல நூறு ஏக்கரில் மக்கச்சோளம் பயிரிட்டுள்ளனர். ஓரளவிற்கு மழை பெய்துள்ளதால் விவசாயம் செழித்து, ஓரளவிற்கு வளர்ந்து காணப்படும் நிலையில் காட்டு பன்றிகள் மற்றும் விலங்குகள் செடிகளை கிளறி வீணடிக்கின்றன. இதனால் தங்களின் வாழ்வதாரம் பாதிக்கப்படும் நிலை இருப்பதாக கூறுகின்றனர் விவசாயிகள்.இதுகுறித்து முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்த விவசாயி கார்த்திக் கூறுகையில் எங்கள் கிராம பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக அதிகளவில் வனவிலங்குகள் நடமாடி வருகின்றன. தற்போது விவசாய நிலங்களில் மக்காச்சோளம், கடலை, உளுந்து பயிரிட்டுள்ளோம். மக்காச்சோளம் வளர்ந்து காணப்படும் நிலையில் அவற்றை காட்டுப்பன்றிகள் நாசம் செய்கின்றன. விவசாயத்தை பாதுகாக்க நாங்கள் காட்டிலே குடியிருக்க வேண்டியிருக்கிறது. எனவே இப்பகுதிக்குள் வரும் காட்டுபன்றிகளை கட்டுப்படுத்தி, விவசாயத்தை பாதுகாக்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்….

Related posts

வார விடுமுறையையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தட்சிணாயன புண்ணியகாலத்தையொட்டி இன்று அண்ணாமலையார் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

நாகப்பபடையாட்சியாரின் தியாக வரலாறு பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிட நடவடிக்கை: தமிழக அரசுக்கு பொன்குமார் வலியுறுத்தல்