திருச்சுழி அருகே கி.பி 9ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை எஸ்பிகே கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியா விஜயராகவன் தலைமையில் வரலாற்று மாணவர்கள் சரத்ராம், செல்வகணேஷ், ராஜபாண்டி, ஆகியோர் சென்னிலைக்குடியில் களஆய்வு செய்தனர். அப்போது முற்கால பாண்டியர் கால மடைக்கல்வெட்டை கண்டறிந்தனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: குளம், கண்மாயில் சேமிக்கப்படும் நீரை தேவையின்றி வீணாகாமல் தடுத்து பாசன வசதியின் பயன்பாட்டிற்கு வசதிக்காக அமைக்கப்படும் அமைப்பு மடையாகும்.இதுபோன்ற மடை அமைப்பு திருச்சுழி அருகே உள்ள சென்னிலைக்குடி கண்மாயில் கண்டறியப்பட்டது. இம்மடையை சார்ந்த நீர்மட்ட அளவு கல்லானது அத்தூணின் மேற்பகுதியில் 10 அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்டு அழகிய வடிவமைப்புடன் காணப்படுகிறது. அதில் கிடைமட்டமாக உள்ள குறுக்கு கல்லில் வட்டெழுத்து பொறிக்கப்பட்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.இவ்வெழுத்தமைதியினைக் கொண்டு இக்கல்வெட்டானது முற்கால பாண்டியர்களின் காலமான கி.பி 9ம் நூற்றாண்டை சார்ந்தது என கருதப்படுகிறது. இக்கல்வெட்டானது  என்ற மங்கல எழுத்துடன் தொடங்கி மனமே துணை என்ற வார்த்தையுடன் நிறைவடைகிறது.தமிழ்நாட்டில் உள்ள மடை கல்வெட்டினை பொறுத்தவரையில் மடை அமைத்தவரின் பெயர், அரசரின் பெயர், ஆட்சி ஆண்டு ஆகியன இடம் பெற்றிருக்கும். ஆனால், இம்மடை கல்வெட்டில் இதுபோன்ற குறிப்புகள் குறிப்பிடாமல் மனமே துணை என்று மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற வரியினை உணர்த்துவதாக அமைகிறது. தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டுள்ள வட்டெழுத்து கல்வெட்டுகளில் இது சற்று வித்தியாசமானதாகும். கல்வெட்டுகளில் திருச்சுழி என்ற பகுதியானது பருத்திக்குடி நாட்டுதேவதானம் என்று அழைக்கப்படுகிறது.திருச்சுழி வட்டாரத்தில் சென்னிலைக்குடியில் கண்டறியப்பட்ட வட்டெழுத்து கல்வெட்டும், திருச்சுழியில் உள்ள சிவன் கோயிலில் காணப்படும் வட்டெழுத்து கல்வெட்டும் அதே பகுதியில் உள்ள பள்ளிமடத்தில் உள்ள சிவன் கோயிலில் காணப்படும் வட்டெழுத்து கல்வெட்டு முற்கால பாண்டியர்கள் காலத்தை சேர்ந்தவையாகும். இந்த வட்டெழுத்து கல்வெட்டுகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய நிலையில் உள்ளதால் இப்பகுதியில் முற்கால பாண்டியர் ஆட்சியானது சிறந்து விளங்கியிருப்பதனை உணர்த்தும் வகையில் இருக்கிறது என கூறினர்….

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்