திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடியில் ரூ.5 – ரூ.100 வரை சுங்கக் கட்டணம் உயர்வு!: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் 5 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடியில் இரவு, பகல் முழுவதும் வாகன நெரிசல் அதிகரித்து காணப்படுவது வழக்கம். ஏனெனில் சென்னையில் இருந்து வரக்கூடிய வாகனங்கள், தென் மாவட்டங்கள் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் இந்த சுங்கச்சாவடியை கடந்து தான் செல்ல வேண்டும். தமிழகத்தில் 24 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு என்பது நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சுங்கக் கட்டண விவரம்:* 4 அல்லது அதற்கு அதிகமான சக்கரங்களை கொண்ட வாகனங்களுக்கு ரூ. 5 முதல் ரூ.100 வரை கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. * கார்கள் இரு முறைக்கு பயணம் செய்ய ரூ.65ல் இருந்து ரூ.75 ஆக அதிகரித்துள்ளது. * ட்ரக் மற்றும் அதிக சக்கரங்கள் கொண்ட சரக்கு வாகனங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. * மல்டி ஆக்ஸில் வாகனங்கள் பல முறை பயணிக்க ரூ.7,305ல் இருந்து ரூ.7,880 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. * சரக்கு வாகனங்கள் இரு முறை பயணிக்க கட்டணம் ரூ.225ல் இருந்து ரூ.245 ஆக அதிகரித்துள்ளது. * சரக்கு வாகனங்கள் பல முறை பயணிக்க கட்டணம் ரூ.4,545ல் இருந்து ரூ.4,905 ஆக அதிகரித்துள்ளது….

Related posts

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை

கட்டுமான தொழில் கடுமையாக பாதிப்பு; ஆந்திராவில் இருந்து மணல் எடுத்து வர அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடிதம்