திருச்சி மாவட்டத்தில் வெளிநாடு கல்வி சுற்றுலாவுக்கு 6 மாணவ, மாணவிகள் தேர்வு

திருச்சி,ஏப்.11: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளி அளவில் கல்வி மற்றும் இணைச் செயல்பாடுகள் நூல்வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவிலும், தேசிய, மாநில அளவிலும் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். இந்த திட்டம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்\” என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

அதன்படி 2022-2023 ம் கல்வியாண்டில் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் மன்றச் செயல்பாடுகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கில்,இலக்கிய மன்றம், வினாடி வினா போட்டிகள், சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் மற்றும் வானவில் மன்றம் போன்றவற்றை ஒவ்வொரு பள்ளியிலும் நிறுவி ஒவ்வொரு மாதமும் நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கலை, விளையாட்டு, வானவில் மன்றம், இலக்கிய மன்றம், வினாடி வினா போட்டிகள் மற்றும் சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் போன்ற செயல்பாடுகளில் அனைத்து அரசு நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் பள்ளி அளவில், வட்டார அளவில், மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாநில அளவிலான போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கலை, விளையாட்டு, வானவில் மன்றம், இலக்கிய மன்றம், வினாடி வினா போட்டிகள் மற்றும் சிறார் திரைப்படங்கள் திரையிடல் போன்ற 6 செயல்பாடுகளில் மாநில அளவில் வெற்றி பெற்று கல்வி சுற்றுலாவுக்கு திருச்சி மாவட்டத்திலிருந்து 6 மாணவ மாணவிகளும் 1 ஆசிரியரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் கலை பிரிவில் குழுமணி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி நட்சத்திரா, சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் பிரிவில் பன்னாங்கொம்பு அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 7ம் வகுப்பு ஸ்ரீவர்சன் மற்றும் எடமலைப்பட்டி புதுார் அரசு மேல்நிலைப்பள்ளி சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி மித்ரா, இலக்கிய மன்றம் பிரிவில் மணச்சநல்லு்ார் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி கலைப்பிரியா. விளையாட்டு பிரிவில் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவன் பிரசனன். வானவில் மன்றம் பிரிவில் எசனக்கோரை பள்ளி 6ம் வகுப்பு மாணவன் தாரேஷ், மற்றும் வழிகாட்டி ஆசிரியர் சிறுகனுார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தீபா ஆகியோர் தேர்வாகி உள்ளனர்

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை