திருச்சி மாவட்டத்திற்கு ஆயிரம் ஆக்ஸிஜன் கருவிகள்-அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

திருச்சி : திருச்சி மாநகராட்சி 45வது வார்டு கருமண்டபத்தில் கொரோனா பரவல் தடுப்பு கள ஆய்வுப்பணி, தடுப்பு மருந்து தொகுப்பு வழங்கும் பணி நேற்று துவங்கப்பட்டது. இதில் கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை வகித்தார். நகாப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு , பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து பேசுகையில், கொரோனா வைரஸ் நோய்ப்பரவல் தடுப்பதற்கு சென்னையில் நேற்று முன்தினம் மாநகராட்சி ஆணையரால்வீடு வீடாக சென்று கொரோனா வைரஸ் நோய் தடுப்பு கள ஆய்வு செய்யும்  திட்டத்தை தொடங்கினார்கள் . இதே போன்று திருச்சி மாவட்டத்தில் தொடங்கி நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்று ஆட்சித்தலைவரிடம் தெரிவித்ததுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த திட்டம் நேற்று மாநகராட்சி 45வது வார்டு கருமண்டபம் பகுதியில தொடங்கி வைக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் நோய் வந்தவுடன் மருத்துவமனையில் சேர்க்கும் பொழுது ஆக்ஸிஜன் மற்றும் படுக்கை வசதி பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக சிங்கப்பூரிலிருந்து ஆக்ஸிஜன் கருவி சென்னைக்கு வந்துள்ளது . இதனை திருச்சி மாவட்டத்திற்கு ஆயிரம் ஆக்ஸிஜன் கருவிகள் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.அங்கன்வாடி பணியாளர்கள் சத்துணவு அமைப்பாளர்கள் , சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகம் உள்ள வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று பல்ஸ் ஆக்ஸினேட்டர் ஆக்ஸிஜன் அளவு , SPO2 – 5 க்கு கீழ் இருந்தால் உரிய சிகிச்சை அளிக்க நகர்நல அலுவலருக்கு பரிந்துரை செய்யப்படும் . தினமும் 100 வீடுகளில் பரிசோதனை செய்யப்படுகிறது. லேசான அறிகுறிகள் இருந்தால் இவர்களுக்கு கபசுரக்குடிநீர் , முகக்கவசம் , வைட்டமின் ஜின்க் மாத்திரை , வைட்டமின் சி மாத்திரைகள் , பாராசிட்டமால் மாத்திரை ஆகிய மருந்துகள் வழங்கப்படும் என்றார்.இதில் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், ரங்கம் சார் ஆட்சியர் விசுமகாஜன் , மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன், முன்னாள் மாநகராட்சி துணை மேயர் அன்பழகன் , மாநகராட்சி நகர் நல அலுவலர் மருத்துவர்.யாழினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்….

Related posts

விஷச் சாராய வழக்கு: 9 பேரிடம் விசாரணை

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!