திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று சிறப்பு காய்ச்சல் முகாம்

திருச்சி, ஜூலை 9: திருச்சி மாநகர பகுதிகளில் இன்று நடைபெறும் சிறப்பு காய்ச்சல் முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வைரஸ் காய்ச்சலைகட்டுப்படுத்தும் விதமாக மாநகர பகுதிகளில் இன்று (9ம் தேதி) சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட உள்ளது. அதன்படி இன்று காலை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட பீமநகர் செங்குளம் காலனி, பீரங்கி குளம் கீழ காசிபாளையம் தெரு, இ.பி.ரோடு பெரியார் நகர், எடமலைப்பட்டிபுதூர் இந்திரா நகர், காந்திபுரம் சின்ன சவுராஷ்டிரா தெரு, இருதயபுரம் வரகனேரி வள்ளுவர் தெரு, காமராஜ் நகர் பிள்ளையார் கோவில்தெரு, காட்டூர் திடீர் நகர், மேலகல்கண்டார் கோட்டை அர்ஜூனன் நகர், அங்கன்வாடி மையம், பெரியமிளகுபாறை மாந்தோப்பு, ராமலிங்கநகர் குளத்து மேடு,

ரங்கம் மேலூர் கீழத்தெரு, சுப்ரமணியபுரம் டிவிஎஸ் டோல்கேட் அண்ணா தெரு, தெப்பக்குளம் ஜான்தோப்பு, தென்னூர் இதயத்நகர் 1வது தெரு, திருவெறும்பூர் மலைக்கோவில், திருவானைக்கோவில் மணல்மேடு, உறையூர் வெக்காளியம்மன் கோவில் தெருஆகிய பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் முகாம் காலையில் நடத்தப்பட உள்ளது. அதுபோல் மாலையில் இதே ஆரம்பசுகாதார நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான பாலக்கரை பிரதான சாலை, பெரிய கம்மாள தெரு, குழுமிக்கரை, ராமசந்திரா நகர், பசுமடம் டி.டி சாலை, வரகனேரி சந்தனபுரம், காந்திநகர், பிள்ளையார் கோவில் தெரு, கணேசநகர் தேவாலயம், பாரதியார்தெரு, நெசவாளர் காலனி, மேலூர் வடக்கு தெரு, இளங்கோ தெரு, பூசாரி தெரு, இதயத் நகர் 2வது தெரு, ராஜவீதி, அழகிரிபுரம், பெஸ்கி நகர் ஆகிய இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடக்கிறது. இந்த முகாமினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் கூறியுள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை