திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்

 

திருச்சி, ஆக.20: திருச்சி மாநகராட்சியில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் அன்பழகன் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை நேற்று பெற்றுக்கொண்டார்.திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து மனுக்களின் மீது உரிய கவனம் செலுத்தி குறைகளை நிவர்த்தி செய்யும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் சரவணன் முன்னிலை வகித்தார். நகரப் பொறியாளர் சிவபாதம், துணை மேயர் திவ்யா, மண்டலத் தலைவர்கள் துர்காதேவி, விஜயலட்சுமி, ஜெயநிர்மலா, நகர்நல அலுவலர் மணிவண்ணன், செயற்பொறியார்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 3 நாளில் 130 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு: துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் பணிகள் விறுவிறுப்பு

மாநகராட்சிப் பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து

பொதுமக்கள் சிறப்பு குறைதீர் முகாம் 8 மாதங்களில் 851 மனுக்கள் மீது தீர்வு