திருச்சி-தஞ்சை மண்டலத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையே ஹாக்கி போட்டி

திருச்சி, ஆக.27: திருச்சி, தஞ்சை மண்டலத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாணவியர்களுக்கான ஹாக்கி போட்டி அண்ணா விளையாட்டரங்கில் நடத்தப்பட்டது. 9 கல்லூரி அணிகள் பங்கேற்ற ஹாக்கி போட்டியின் இறுதி போட்டியில் ஹோலி கிராஸ் கல்லூரி, தஞ்சை குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்று முதலிடம் பிடித்து திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவியர்களுக்கான சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டது. மூன்றாவது இடத்திற்கு புதுகை பாரதி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதி இந்திரா காந்தி கல்லூரியை 4-0 என்ற கோல் கணக்கில் வென்று மூன்றாவது இடம் பிடித்தது.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் ஹோலி கிராஸ் கல்லூரி துணை முதல்வர் ஜோஷ்வா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றிபெற்று முதல் நான்கு இடங்களை பிடித்த கல்லூரி அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை திருச்சி, பாரதிதாசன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்று முதல் நான்கு இடங்களை பிடித்த கல்லூரி அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வி துறை தலைவர் மற்றும் விளையாட்டு செயலாளர் பேராசிரியர் மெஹபூப்ஜான், தஞ்சை, குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் மற்றும் பெண்கள் போட்டி ஒருங்கிணைப்பாளர் தேன்மொழி மற்றும் ஹோலி கிராஸ் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் திரவியா கிளாடினா ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

Related posts

சென்னையில் 17 வழித்தடங்கள் மூலம் விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலம்:  கட்டுப்பாடுகளை மீறினால் கைது  காவல்துறை எச்சரிக்கை

அடையாறு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் : காவல் துறை அறிவிப்பு

தி.நகர் காவல் மாவட்டத்தில் போதை தடுப்பு நடவடிக்கை கஞ்சா விற்ற 30 பேர் கைது