திருச்சி அருகே விபத்து கண்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதி 8 பேர் படுகாயம்

 

திருவெறும்பூர், ஜூன் 11: திருச்சி மணிகண்டம் அருகே மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது பின்னால் வந்த அரசு பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் காயமடைந்தனர். நேற்று இரவு தூத்துக்குடியில் இருந்து ஆந்திராவுக்கு தூத்துக்குடி விளாத்திகுளம் பூசனூர் தெற்கு தெருவை சேர்ந்த வேதலிங்கம் (48) என்பவர் கண்டெய்னர் லாரியை மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மணிகண்டம் அருகே ஓட்டி வந்தபோது கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் இருந்து சென்னை நோக்கி குளச்சல் பகுதியை சேர்ந்த லட்சுமணன் (54 ) என்பவர் அரசு பேருந்து ஓட்டி வந்துள்ளார்.

திருச்சி மணிகண்டம் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளார். இதில் பஸ்சில் அமர்ந்திருந்த எட்டு பேர் காயமடைந்தனர். அவர்களை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மணிகண்டம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டதோடு இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்