திருச்சி அருகே வாடகைக்கு வீடு எடுத்து போலி மது தயாரித்து பார்களுக்கு சப்ளை: 5 பேர் கைது 1,893 மது பாட்டில்கள் பறிமுதல்

திருச்சி: திருச்சி மாவட்டம் மணிகண்டம் செட்டியப்பட்டி அருகே காட்டு பகுதியில் உள்ள  போலி மதுபான ஆலை இயங்கி வந்த ஒரு  வீட்டை சுற்றி வளைத்த திருச்சி மாவட்ட மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசார் உள்ளே இருந்த 5 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், கார்த்திக் (32),பாலமுருகன், சூர்யா (24), வெற்றி செல்வம், விஜயகுமார் என்பதும், இவர்கள் 3 மாதத்துக்கு முன் வீட்டை வாடகைக்கு எடுத்து போலி மதுபாட்டில்கள் தயாரித்து வந்தது தெரியவந்தது.இதைதொடர்ந்து போலி மது தயாரிப்புக்கு மூளையாக செயல்பட்ட கார்த்திக்கிடம் போலீசார் நடத்திய விசாரணையில், காரைக்காலில் இருந்து மது தயாரிக்கும் பவுடர், எசன்ஸ் வாங்கி வந்து குடிநீரில் கலந்து போலி மது தயாரித்து பாட்டில்களில் அடைத்து திருச்சி மறறும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பார்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து அங்கிருந்த 560 லிட்டர் ஸ்பிரிட், 20,000 ஹாலோகிராம் ஸ்டிக்கர், 20,000 போலி லேபிள், 1,893 மது நிரப்பிய பாட்டில்கள், 7,000 காலி பாட்டில்கள், 60,000 மூடிகள், எசன்ஸ் கலந்த 100 லிட்டர் திரவம், ஏராளமான வாட்டர் கேன்கள் மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்….

Related posts

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சென்னை குடிநீர் ஏரிகளில் 39.82% நீர் இருப்பு

மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிவு

குமரியில் கடல்நீர் உள்வாங்கியதால் படகு சேவை நிறுத்தம்