திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பவித்ர உற்சவத்தையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம்

திருமலை : திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பவித்ர உற்சவத்தையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பவித்ர உற்சவத்திற்காக நேற்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதனையொட்டி, பத்மாவதி தாயாருக்கு  சகஸ்ரநாமார்ச்சனை செய்யப்பட்டது.  பின்னர், காலை 7 மணி  முதல் 9.30 வரை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.  இதில் மூலவர், சன்னதி,  கொடிமரம், கோயில் வளாக சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் போன்ற அனைத்து இடங்களும்  தண்ணீரில் சுத்தம் செய்யப்பட்டன. பிறகு, கோயில் முழுவதும் நாமகட்டி மற்றும் திருசூரணம், பச்சை கற்புரம் உள்ளிட்ட மூலிகைகள் கொண்டு கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. இதையடுத்து, ஐதராபாத்தை சேர்ந்த  ஸ்வர்ணகுமார் கோயிலுக்கு 17 திரைகளை நன்கொடையாக  வழங்கினார். வருகிற 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை பத்மாவதி தாயார்  கோயிலில் பவித்ர உற்சவம்  நடத்தப்பட உள்ளது. நிகழ்ச்சியில் கோயில் துணை செயல் அதிகாரி லோகநாதம், உதவி செயல் அதிகாரி பிரபாகர், கண்காணிப்பாளர் மது, கோயில் அர்ச்சகர் பாபுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்….

Related posts

1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் வழங்க ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார்

11 மணி நிலவரம்: ஹரியானாவில் 23% வாக்குப்பதிவு

திருப்பதியில் ரூ.13.45கோடியில் சமையற்கூடம் திறப்பு