திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் தானியங்களை உலர்த்துவதால் தொடரும் விபத்துக்கள்: நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த புறவழிச்சாலை பகுதியில் தானியங்களை உலர்த்துவதால் தொடர்ச்சியாக விபத்துக்கள் நடந்து வருகிறது. காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த புறவழிச்சாலை பகுதியில் திருக்கோவிலூரில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் அப்பகுதி விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் பயிரிடப்படும் தானியங்களை அறுவடை செய்து கொண்டு வந்து இச்சாலையில் போட்டு உலர்த்துவதால் தொடர்ந்து இப்பகுதியில் ஒவ்வொரு வருடமும் இருசக்கர வாகன விபத்துக்கள் நடந்து வருகிறது. கடந்த வருடம் இதேபோல் கொளப்பாக்கம் கூட்ரோடு பகுதியில் சாலையில் தானியங்களை உலர்த்துவதால் வடக்கு நெமிலி பகுதியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பைக்கில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்து தானியங்களை உலர்த்த பயன்படுத்தப்பட்ட கருங்கல்லில் தலை பட்டு அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் வடக்கு நெமிலி பகுதியை சேர்ந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். திருக்கோவிலூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சாலையில் உலர்த்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஆனால் இந்த வருடமும் சாலையில் தானியங்களை அப்பகுதி விவசாயிகள் உலர்த்துகின்றனர். இதனால் மீண்டும் உயிர் சேதம் ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருக்கோவிலூர் காவல் துறையினர் புறவழிச்சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு சாலையில் தானியங்களை உலர்த்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 5 வருடமாக புறவழிச்சாலையில் தானியங்களை உலர்த்துவதால் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று உயிர் சேதம் ஏற்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்