திருக்குறளை குறிப்பிட்டு பட்ஜெட் உரை தொடக்கம்

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக திருக்குறளை கூறி தன்னுடைய பட்ஜெட் உரையை தொடங்கினார். அப்போது அவர், ‘2021-22ம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளை இந்த பேரவையில் முன்வைக்கும் பெருமைமிகு இத்தருணத்தில் காலத்தை வென்று நிற்கும் அய்யன் திருவள்ளுவரின் குறளை நான் குறிப்பிட விரும்புகிறேன். ‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு’ முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுகாத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ், திமுக ஆட்சி, திறன்மிகு, வெளிப்படையான நிர்வாகத்தின் மூலம் சிறப்பாகச் செயல்படும் என்று பெரும் நம்பிக்கை வைத்து தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். தமிழ்நாட்டின்  மக்கள் நம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப சேவையாற்றிட நாம் உறுதியாக உள்ளோம் என்றார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை