திருக்காடுதுறை அருகே பாம்பு பிடிபட்டது

 

வேலாயுதம்பாளையம், மார்ச் 21: கரூர் மாவட்டம் திருக்காடுதுறை ஊராட்சி ஆலமரத்துமேடு பகுதியில் இருந்து காகித ஆலைக்கு செல்லும் சாலையில் தீயணைப்பு நிலையம் மற்றும் குடியிருப்பு வீடு உள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் தீயணைப்பு வீரர்கள் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வேகமாக வந்த பாம்பு குடியிருப்பு வீடு மற்றும் தீயணைப்பு நிலையத்திற்குள் உள்ளே நுழைவதற்கு முயற்சி செய்தது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தீயணைப்பு வீரர்கள் ஓடிச் சென்று பாம்பு பிடிக்கும் குச்சியை எடுத்து வந்து பாம்பை பிடித்து சாக்கு பைக்குள் போட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.  ஆட்கள் நின்று கொண்டிருந்த போதே அந்தப் பகுதிக்கு பாம்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு