திராட்சையில் பூஞ்சை நோய் கட்டுப்படுத்துவது குறித்து தோட்டக்கலை மாணவர்கள் செயல்விளக்க பயிற்சி

கம்பம், ஆக. 30: கம்பம் பகுதியில் திராட்சை சாகுபடியில் பூஞ்சான நோய்களைக் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர். திருவில்லிபுத்தூர், கலசலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் அஹமத், புவனேஸ்வரன், மதன்குமார், விக்னேஷ் மணிகுமார், ஷாய் வர்ஷன், ஹரி கிருஷ்ணா ஆகியோர் ஊரக தோட்டக்கலை பணி அனுபவத் திட்டத்தின் கீழ், கம்பம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பாண்டியராணா,

தோட்டக்கலை அலுவலர் பழனிவேல் ராஜன், உதவி அலுவலர்கள் மோகன்ராஜ், பால்முருகன் சுதாகர், விவேகானந்தன் உதவியுடன், காமயகவுண்டன்பட்டி பகுதி திராட்சை விவசாயிகளுக்கு திராட்சையில் ஏற்படும் பூஞ்சை நோய்களைக் கட்டுப்படுத்தும் முறை பற்றி செயல்முறை விளக்கம் அளித்தனர். இந்த செயல்முறை விளக்கத்தின்போது, குழு ஆலோசகர் டாக்டர் பாண்டியராஜ், பாட ஆசிரியர் டாக்டர் விஜயகுமார் தலைமையில் விவசாயிகளிடம் சல்பர் பூஞ்சானக்கொல்லி பயன்படுத்தி இலைச்சாம்பல் நோய், அடிச்சாம்பல் நோய் போன்ற பூஞ்சை நோய்களை எளிதில் கட்டுப்படுத்தலாம் என்று விவசாயிகளிடம் செயல்முறை விளக்கமாக செய்துகாட்டினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்